தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.

by Editor / 08-08-2024 09:26:07am
தமிழக மீனவர்கள் மீது  கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை வேதாரண்யம் அருகே கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடம் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்களை பறித்துச் சென்றனர். காயமடைந்த மீனவர் அன்பழகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார், மீனவளத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

 

Tags : தமிழக மீனவர்கள் மீதுகடற்கொள்ளையர்கள் தாக்குதல்

Share via