அண்ணாமலையார் கோவிலில்  துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

by Editor / 19-01-2025 08:44:07am
 அண்ணாமலையார் கோவிலில்  துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று வருகை புரிந்தார். 

அண்ணாமலையார் கோயிலுக்கு சென்ற  துர்கா ஸ்டாலின் முதலில் சம்பந்த விநாயகர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அண்ணாமலையார் சன்னதி, உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட கோவிலில் உள்ள பல்வேறு சந்நதிகளில் வழிபட்டார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு பிரசாதங்கள் வழங்கி கௌரவித்தனர். 

 

Tags :  அண்ணாமலையார் கோவிலில்  துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

Share via