எங்கள் கொள்கைக்கு உடன்படும் கட்சியுடன் கூட்டணி - சீமான்

by Staff / 13-07-2024 05:12:08pm
எங்கள் கொள்கைக்கு உடன்படும் கட்சியுடன் கூட்டணி - சீமான்

கூட்டணி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எங்கள் கனவை ஏற்று கொள்ளும் கட்சியுடன், எங்கள் கொள்கைக்கு உடன்படும் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர், "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என்ன நடக்கும் என்று தெரிந்துதான் அதிமுக ஒதுங்கியது. ஆனால், நாங்கள் வளர்ந்து வரும் கட்சி அப்படி பின்வாங்க முடியாது. எங்கள் கருத்துகளை வைத்துக்கொண்டு, நாதக என ஒரு கட்சி இருக்கிறது என மக்களுக்கு தெரியப்படுத்தி கொண்டே இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via