வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகளில்திடீர் ஆய்வு

by Editor / 19-09-2021 06:02:30pm
வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகளில்திடீர் ஆய்வு

தியாகராயநகர் வணிக வளாகங்கள் மற்றும் மார்கெட் பகுதிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, மாநகர காவல் துறை கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் போன்ற இடங்களில் அரசின் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகள், அங்காடிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா என கண்காணிக்க மாநகராட்சியின் சார்பில் காவல் துறையுடன் இணைந்து பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் பெருநகர சென்னை காவல் ஆணையாளர் தலைமையில் ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறையுடன் இணைந்து மாநகராட்சியின் சார்பில் வார்டிற்கு ஒரு குழு என 200 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் மாநகராட்சியைச் சார்ந்த 5 நபர்களும், காவல்துறையைச் சார்ந்த ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, மாநகர காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவால், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 136, தியாகராய நகர் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என நேரிடையாக சென்று களஆய்வு மேற்கொண்டார்கள். தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலம், மெரினா கடற்கரை பகுதிகள் மற்றும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த பொதுமக்களிடையே முககவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் பற்றி எடுத்துரைத்துக்கப்பட்டது.

பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் பற்றி எடுத்துரைத்துக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.

மேலும், மாநகராட்சி துணை ஆணையாளர்கள், வட்டார துணை ஆணையாளர்கள் மற்றும் காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். களஆய்வின்போது, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ரூ.2,83,800 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 06.05.2021 முதல் வரை கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 8,881 நிறுவனங்களிடமிருந்தும் மற்றும் 73,126 தனிநபர்களிடமிருந்து ரூ.4.42 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via