இந்த மாதம் இவ்வளவு நாட்கள் வங்கிகள் விடுமுறை.. தேதி வாரியாக விவரம்..தெரிந்துகொள்ளுங்கள்..

by Editor / 01-09-2023 10:15:05am
இந்த மாதம் இவ்வளவு நாட்கள் வங்கிகள் விடுமுறை.. தேதி வாரியாக விவரம்..தெரிந்துகொள்ளுங்கள்..

ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதத்திற்குள் கால் பதித்துவிட்டோம் இந்த மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப வேலைகளைத் திட்டமிடுங்கள். 2023 செப்டம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

இந்த செப்டம்பர் மாதத்தில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மொத்தம் 16 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அழைக்கப்பட்டுள்ளது.இதில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், ஒவ்வொரு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறையும் அடங்கும்.

செப்டம்பர் 2023-ல் வார இறுதி விடுமுறை நாட்களின் பட்டியல்:

செப்டம்பர் 3 - ஞாயிற்றுக்கிழமை

செப்டம்பர் 9 - இரண்டாவது சனிக்கிழமை

செப்டம்பர் 10 - ஞாயிற்றுக்கிழமை

செப்டம்பர் 17 - ஞாயிற்றுக்கிழமை

செப்டம்பர் 23 - நான்காவது சனிக்கிழமை

செப்டம்பர் 24 - ஞாயிற்றுக்கிழமை

அதேபோல இந்த செப்டம்பரில் குறிப்பிடத்தக்க திருவிழாக்கள் மிகுதியாக வருகின்றன . இந்த மாதம் விநாயக சதுர்த்தி, ஈத்-இ-மிலாத் மற்றும் ஜன்மாஷ்டமி ஆகிய நாட்களில் விடுமுறை கொண்டாடப்படும். பல தேசிய விடுமுறைகளும் உள்ளன. அன்றைய தினம், நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கி செயல்பாடுகளும் மூடப்படும். இருப்பினும், சில விடுமுறைகள் உள்ளூர் அல்லது பிராந்தியத்தில் மட்டுமே அனுசரிக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள வங்கிகள் மட்டும் உள்ளூர் விடுமுறை நாட்களில் மூடப்படும்.

செப்டம்பர் 6 ஆம் தேதி, ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி காரணமாக புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத் மற்றும் பாட்னாவில் வங்கிகள் மூடப்படும்.

செப்டம்பர் 7 ஆம் தேதி, ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு, அகமதாபாத், சண்டிகர், டேராடூன், காங்டாக், தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

செப்டம்பர் 18 அன்று, வரசித்தி விநாயக விரதம் , விநாயக சதுர்த்தி காரணமாக பெங்களூரு மற்றும் தெலுங்கானாவில் வங்கிகள் மூடப்படும்.

செப்டம்பர் 19 அன்று விநாயக சதுர்த்தியை முன்னிட்டு அகமதாபாத், பேலாப்பூர், புவனேஸ்வர், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

செப்டம்பர் 20ம் தேதி விநாயக சதுர்த்தி மற்றும் நுவாகை காரணமாக கொச்சி மற்றும் புவனேஸ்வரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

செப்டம்பர் 22 - ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம்

ஸ்ரீ நாராயண குரு சமாதி தினமான செப்டம்பர் 22 அன்று கொச்சி, பனாஜி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்படும்.

செப்டம்பர் 25ஆம் தேதி ஸ்ரீமந்த் சங்கர்தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு கவுகாத்தியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27 அன்று ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள வங்கிகள் மிலாட்-இ-ஷரீப் காரணமாக  மூடப்பட்டிருக்கும்.

செப்டம்பர் 28 - ஈத்-இ-மலித் அல்லது ஈத்-இ-மிலாதுநபி (Bara Vafat)

செப்டம்பர் 29 - ஈத்-இ-மிலாட்-உல்-நபி -க்கு பிறகு வரும் இந்திரஜாத்ரா மற்றும் வெள்ளிக்கிழமை என்பதால் ஜம்மு & காஷ்மீரில் விடுமுறை

 

Tags : இந்த மாதம் இவ்வளவு நாட்கள் வங்கிகள் விடுமுறை

Share via