வாக்காளர்களுக்கும் - கூட்டணி கட்சித் தொண்டர்களுக்கும் மதிப்பளிக்காத தென்காசி திமுக வேட்பாளர்

by Staff / 31-03-2024 04:16:56pm
வாக்காளர்களுக்கும் - கூட்டணி கட்சித் தொண்டர்களுக்கும் மதிப்பளிக்காத தென்காசி திமுக வேட்பாளர்

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் இன்று முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் 2 மணி நேரம் தாமதமாக வந்தவுடன்,  தனது பிரச்சார வாகனத்தில் கூட்டணி கட்சிகள் கொடிகள் இல்லாமல் திமுக கொடியுடன் பிரச்சாரம் செய்தது வாக்காளர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அறிமுகம் கூட்டம் நடைபெற்ற வந்தது.

அதனைதொடர்ந்து இன்று முதல் நாள் தேர்தல் பரப்புரையை காலை 7:30 மணி அளவில் புளியரை கோட்டைவாசல் பகுதியில் தொடங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்பை தொடர்ந்து காலை முதலே தொண்டர்கள் வெயிலில் காத்திருந்த  நிலையில் இரண்டு மணி நேரம் தாமதமாக வேட்பாளர் வருகை தந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது அவரது பிரச்சார வாகனத்தில் கூட்டணி கட்சிகளுக்கான கொடிகள் இடம்பெறாத நிலையில் திமுக கொடி மட்டுமே இடம்பெற்றது. இது வாக்கு சேகரிப்பில் ஈடுபடுத்த வந்த கூட்டணி கட்சி தொண்டர்களிடம் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. அந்த வகையில் முதல் நாள் தேர்தல் பரப்புரையின் போதே திமுக வேட்பாளரின் செய்கை தொண்டர்களையும் கூட்டணி கட்சி தொண்டர்களிடமும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via