மதுரை மீனாட்சி அம்மன் கோவில்சுவாமி சன்னதி நடை சாத்தப்பட்டது.

by Editor / 13-09-2024 10:43:35am
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்சுவாமி சன்னதி நடை சாத்தப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா - இன்று மதியம் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறவுள்ள நிலையில் இன்று காலை அம்மன், சுவாமி சன்னதி நடை சாத்தப்பட்டது.
புட்டுக்கு மண் சுமந்த லீலைக்காக தலையில் தங்க மண்கூடை அலங்காரத்தில் சுவாமியும், மீனாட்சியம்மனும் புட்டுதோப்பிற்கு புறப்பட்டனர்.சொக்கநாதரும் மீனாட்சி அம்பாளும் மாலை 6 மணிக்கு மேல் புட்டு தோப்பில் இருந்து‌ கோவிலுக்கு திரும்பியதும் நடை திறக்கப்படும் -என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags : மதுரை மீனாட்சி அம்மன் கோவில்சுவாமி சன்னதி நடை சாத்தப்பட்டது.

Share via