தமிழகத்தில் இரண்டாவது திருநங்கை  எஸ்.ஐ. திருநங்கை சிவன்யா தேர்வு 

by Editor / 31-07-2021 10:38:27am
தமிழகத்தில் இரண்டாவது திருநங்கை  எஸ்.ஐ. திருநங்கை சிவன்யா தேர்வு 


நாட்டிலேயே காவல்துறையில் முதன்முதலில் பணியில் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி. சேலம் கந்தம்பட்டியை சேர்ந்தவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல்துறை உதவி ஆய்வாளருக்கான பணிக்கான தேர்வு எழுதி தருமபுரி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். 


பிரித்திகா யாசினி, சென்னை சூளைமேடு காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், மேலும் ஒரு திருநங்கை துணை ஆய்வாளராக தேர்ச்சி பெற்றுள்ளார். 


திருவண்ணாமலை ஊராட்சிக்கு உட்பட்ட பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்த செல்வவேல் வளர் தம்பதிக்கு இரண்டாவதாக பிறந்தவர் சிவன்யா. இவரது உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தால் திருநங்கையாக மாறி விட்டதாக கூறப்படுகிறது.
அரசு பள்ளி மற்றும் கல்லூியில் படித்து இளம் வணிகவியல் பட்டம் பெற்றுள்ள சிவன்யா தனது கடினமான பயிற்சி எடுத்து காவல்துறை துணை ஆய்வாளர் பதவிக்கு தேர்வாகியுள்ளார்.
--

 

Tags :

Share via