காவலர்களுக்கு வாரத்தில்  ஒரு நாள் கட்டாய விடுப்பு  டிஜிபி சைலேந்திரபாபு

by Admin / 31-07-2021 10:40:19am
 காவலர்களுக்கு வாரத்தில்  ஒரு நாள் கட்டாய விடுப்பு  டிஜிபி சைலேந்திரபாபு

 

காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுப்பு வழங்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு 
பிறப்பித்துள்ளார். 


இது தொடர்பாக  டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்காகவும், தங்களது குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


வார நாட்களில் ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், தமிழக காவல்துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்தி, மாவட்ட, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்மந்தப்பட்ட ஆளிநர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
இந்த அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via

More stories

Logo