ஜெயலலிதா மரணம் 5 ஆண்டுகளுக்கு பின் விசாரணை அறிக்கை தாக்கல்

by Editor / 27-08-2022 06:27:51pm
ஜெயலலிதா மரணம் 5 ஆண்டுகளுக்கு பின் விசாரணை அறிக்கை தாக்கல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் ஜெயலலிதா மரணம் தொடர்பான 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி முதலமைச்சரிடம் சமர்ப்பித்தார்.வரும் 29ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு வழங்கிய அவகாசம் கடந்த 24ஆம் தேதியுடன் முடிவடைந்ததால், 5 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2016ஆம் ஆண்டு காலமான ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுந்ததால், கடந்த 2017 செப்டம்பரில் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

சசிகலா, ஓபிஎஸ், அப்போலோ மருத்துவர்கள், அதிகாரிகள் உட்பட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கையும் அண்மையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

 

Tags :

Share via