பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலி.. போர்மேன் கைது
சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் பலரும் வேலை செய்து வந்தனர். இன்று (ஜூலை. 01) காலை ஆலையில் பட்டாசுகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலையின் போர்மேனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Tags :



















