நமது நாட்டின் சொத்து விவசாயிகள் தான்.-ஆளுனர் ஆா்.என்.ரவி

by Admin / 28-09-2023 07:22:08pm
 நமது நாட்டின் சொத்து விவசாயிகள் தான்.-ஆளுனர் ஆா்.என்.ரவி

தமிழல் உரையை தொடங்கியஆளுனர் ஆா்.என்.ரவி.

இந்த நாள் எனக்கு சந்தோஷம் நாள். இந்த இடம் எனக்கு சந்தோஷம் தரக்கூடிய இடம். வடக்கே காசி இருப்பது போல் தெற்கே தென்காசி உள்ளது..பாரதியார் இந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் அதேபோல், பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களை உருவாக்கிய மண்.11-ம் நூற்றாண்டில் மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்தவர் நமது பாரம்பரியத்தை அழித்த போது, அதே போன்று கட்டிடங்களை பராம்பரியத்துடன் தெற்கே உருவாக்கியவர் பராக்கிரம பாண்டியமன்னன்.நான் ஒரு விவசாய குடும்ப தான். 11-ம் மற்றும் 12ம் வகுப்பில் படிக்கும் காலத்தில் இருந்து விவசாய பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுவருகிறேன். அதனால் எனக்கு விவசாயிகளை பார்க்கும் போது தனி மரியாதை மற்றும் பிடித்தம் தோன்றும்.

தன்னை உங்களுக்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரியாகவும், கவர்னராகவும் தான் தெரியும். விவசாய பணி என்பது கடினமானது. விவசாயிகளின் வாழ்க்கை என்பது அதிகமான மேடு பள்ளங்களை கொண்டஇந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயின்ற பலர் இயற்கை விவசாயம் செய்து வருவது பாராட்டத்தக்கது. இயற்கை விவசாயத்தின் மூலம் வேதிபொருட்கள் இல்லாத உடலுக்கு நன்மை பயக்ககூடிய உணவுப்பொருட்களை தாம் உற்பத்தி செய்யலாம்.காலநிலை மாறுபாட்டின் காரணமாக பல்வேறு இயற்கை மாற்றங்கள் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு சில வருடங்களில் பல நாடுகள் அழியும் நிலைக்கு தள்ளப்படும்.நமது நாடு காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் உலக்கத்திற்கே உதாரணமாக உள்ளது.உலகத்திற்கே எடுத்துகாட்டாக உள்ள நமது பாரதத்தின் உந்து சக்தி விவசாயிகளாகிய நீங்கள் தான்.பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய லைஃப் என்ற திட்டம் ஐநா சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அதில் நாம் வாழ்க்கையை எவ்வாறு நகர்த்துகிறோம்? இயற்கை சக்தியை எவ்வாறு உற்பத்தி செய்கிறோம், பயன்படுத்துகிறோம் என்பதையெல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் நடந்த ஜி 20 மாநாட்டில் இந்த திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை நம்முடைய பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார். அந்த திட்டத்தினை உலக தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு வரவேற்றுள்ளார்கள் என்பது இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.ஆயிரக்கணக்கான வருடங்கள் நாம் விவசாயம் செய்து வருகிறோம். நமது நாட்டின் சொத்து விவசாயிகள் தான்.இயற்கை விவசாயத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும்..

இயற்கை வேளாண்மை மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி  வருகிறார்கள். ஆகவே, சந்தைபடுத்துதல் முறையை நாம் தெளிவாக கற்று அதன்மூலம் விளைபொருட்களை விற்பனை செய்தால் கனிசமான லாபத்தை பெறமுடியும்..வரும் காலங்களில் இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்த தனியாக சந்தை உருவாக்கப்படும். அந்த காலகட்டத்தில் இயற்கை விவசாயம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

 

 நமது நாட்டின் சொத்து விவசாயிகள் தான்.-ஆளுனர் ஆா்.என்.ரவி
 

Tags :

Share via

More stories

Logo