குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை

by Staff / 26-03-2023 12:48:58pm
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த சதீஷ் (39), வேதா (35) தம்பதியருக்கு நிஷிகேத் (9), நிஹால் (5) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நிஹால் ஆட்டிசம் எனப்படும் குறைபாட்டுடன் பிறந்தவர். சில நாட்களுக்கு முன்பு, நிஷிகேத்தும் மூளைக்காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கணவன்-மனைவி இருவரும் குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்துவிட்டு பின்னர் அதை தாங்களும் சாப்பிட்டுவிட்டு உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo