.பாஜக அமைச்சர் தோல்வி: ஆதரவாளர் தற்கொலை

by Staff / 16-05-2023 12:41:12pm
.பாஜக அமைச்சர் தோல்வி: ஆதரவாளர் தற்கொலை

கர்நாடக சட்டசபை தேர்தலில் அமைச்சர் டாக்டர் கே.சுதாகரின் தோல்வியால் மனமுடைந்த அவரது ஆதரவாளர் தற்கொலை செய்து கொண்டார். சிகபெல்லாபுரத்தைச் சேர்ந்த சித்தாரா வெங்கடேஷ் என்பவர் நேற்று வத்ரேபாலய கிராமத்தில் உள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சுதாகர் 10,642 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீப் ஈஸ்வரிடம் தோல்வியடைந்தார். மற்றொரு சம்பவத்தில், மைசூரில் ஜே.டி.எஸ். தலைவர் சாரா மகேஷின் ஆதரவாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். மகேஷ் 25,639 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் ரவிசங்கரிடம் தோல்வியடைந்தார்.

 

Tags :

Share via

More stories