பொங்கல் பண்டிகை ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயம்..?
பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் 10 , 11 , 12 , 13 ஆகிய தேதிகளில் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக ரூ.1,050 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.3,899 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சென்னையிலிருந்து நெல்லைக்கு வழக்கமாக ரூ.799 வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ரூ.2,000க்கு மேல் கட்டணம் நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.சென்னையிலிருந்து மதுரைக்கு வழக்கமாக ரூ.640 வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ரூ.1,700 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சென்னையிலிருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.849 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.2,470 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த கட்டணங்களில் மாற்றங்கள் உண்டு எனவும் புக்கிங் செய்யும் ஏஜெண்டுக்கள் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : பொங்கல் பண்டிகை ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயம்..?