5மாநில சட்டமன்றத்தேர்தல் தேதிகளை அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா

by Editor / 08-01-2022 07:50:26pm
5மாநில சட்டமன்றத்தேர்தல் தேதிகளை அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 690 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது,தேர்தல் ஆணையத்தின் முதல் முன்னுரிமை பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்துவது தான்,18.34 கோடி வாக்காளர்கள் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப், ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க உள்ளனர்.
இவர்களில் 8.55 கோடி பெண் வாக்காளர்கள்,24.98 லட்சம் பேர் முதல் முறையாக  வாக்களிக்க உள்ள வாக்காளர்கள்.
உத்திரபிரதேசத்தில்  403 தொகுதிகள், பஞ்சாபில் 117 தொகுதிகள், உத்தரகண்டில் 70 தொகுதிகள், மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளில்  தேர்தல் நடைபெறுகிறது.

ஒரு வாக்கு பதிவு மையத்தில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர்களின் எண்ணிக்கை 1250 ஆக குறைப்பு
5மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன.


உ.பி:


10-02-2022 முதல் கட்டம்


14-02-2022 இரண்டாம் கட்டம்


20-02-2022 மூன்றாம் கட்டம்


23-02-2022  நான்காம் கட்டம்


27-02-2022 ஐந்தாம் கட்டம்


03-03-2022 ஆறாம் கட்டம்


07-03-2022  7ம் கட்டம்


பஞ்சாப்,உத்தரகண்ட்,கோவா  -14-02-2022


மணிப்பூர்- 27-02-2022, 3-03-2022

5மாநில சட்டமன்றத்தேர்தல் தேதிகளை அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா
 

Tags :

Share via