விடுதிகளில் தங்கும் மாணவிகளே உஷார்.. யாரையும் நம்பாதீங்க..

by Editor / 30-09-2022 10:57:09pm
விடுதிகளில் தங்கும்  மாணவிகளே உஷார்.. யாரையும் நம்பாதீங்க..

 உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் துல்சி நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு மருத்துவ தேர்வுகளுக்காக தயாராகும் மாணவிகள், தங்கி படிக்கும் பெண்கள் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவிகள் தங்கள் பணி நிமித்தமாகவும், மற்றும் உயர்படிப்பு வசதிக்காகவும்  தங்கியுள்ளனர். 

இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த விடுதியின் துப்புரவு பணியாளர் ஒருவர், அங்கிருந்த மாணவி ஒருவர் குளித்துக்கொண்டிருக்கும்போது அவரை இரகசியமாக மறைந்திருந்து தனது மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். இதனை கண்ட சக மாணவி ஒருவர், அவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த மொபைல் போனை பறிமுதல் செய்துள்ளார். பின்னர் அதனை சோதித்தபோது அதில், பல பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள், குளியல் வீடியோக்கள் என பல ஆபாசமான விஷயங்கள் இருந்துள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, சக பெண்களிடம் தெரிவித்தது மட்டுமின்றி, இவரை விடுதி காப்பாளரிடம் ஒப்படைத்தார்.

காவல்துறையினரிடமும் புகார் செய்யபட்ட தைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது துப்புரவு பணியாளர் மொபைல் போனையும் பறிமுதல் செய்தபோது அதில் மாணவிகளின் வீடியோ இருந்தது உறுதியானது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories