டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா

by Editor / 02-04-2022 08:49:32pm
டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா

  டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி குத்து விளக்கேற்றினார்.கோலாகலமாக நடைபெற்ற திறப்பு விழாவில், மத்திய அமைச்சர்கள்,  ராகுல்காந்தி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.டெல்லி, திமுக அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள மார்பளவு அண்ணா சிலையை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார் , முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திமுக எம்.பி., டி.ஆர். பாலு திறந்து வைத்தார். 

 

Tags : DMK DELHI

Share via
Logo