கென்யாவின்சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த உளவுத்துறைத் தலைவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று காலை 9:13 மணியளவில் ,கென்யாவின் சாம்புருகவுண்டியில் உள்ள மவுண்ட் ஒலோலோக்வே மலைப்பகுதியில் நடந்த இந்த கோரமான சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணம் செய்த உளவுத்துறைத் தலைவர் உட்பட 7 பேரும் உயிரிழந்துள்ளனர். லைசாபா வனவிலங்கு காப்பகத்தில் இருந்து எவாசோ நீரோபகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. ஈக்வடார் நாட்டின் உளவுத்துறை மையத்தின் தலைவர் மைக்கேல் சென்சி-கான்டுகி அவரது மனைவி ஸ்டெபானி ஹோலிஹான் மற்றும் 5 அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் இவ்விபத்தில் பலியாகினர்.
பலியான அமெரிக்கர்களில், அமெரிக்காவின் பிரபலடெலிமுண்டோ தொலைக்காட்சி நிறுவனத்தின் மூத்த நிர்வாகியான ஜோஸ் ஆல்பெர்டோ சுவாரெஸ் என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.லேடி லோரி ஹெலிகாப்டர்ஸ்நிறுவனத்திற்குச் சொந்தமான, ரக ஒற்றை எஞ்சின் ஹெலிகாப்டர் இதில் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த மலைப்பகுதி மிகவும் கரடுமுரடானதாக இருப்பதாலும், விபத்திற்குப் பின் அங்கு கடுமையான தீப்பற்றி எரிந்ததாலும் மீட்புப் பணிகள் பெரும் சவாலாக இருந்தன. மீட்புக் குழுவினர் ட்ரோன்கள் மூலம் விபத்து பகுதியை ஆய்வு செய்தனர். இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை; கென்யாவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம், விமான விபத்து விசாரணைத் துறை இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :


















