பிரதமர் பதவிக்குரிய மாண்பை மோடி சீர்குலைத்துவிட்டார்"மன்மோகன் சிங் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் பதவிக்குரிய மாண்பை மோடி சீர்குலைத்துவிட்டார். பிரச்சாரம் முழுவதும் அவர் வெறுப்பு பேச்சை பேசி வருகிறார். குறிப்பிட்ட சமுதாயத்தினரை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். அவரின் பிரச்சாரம் மக்களை பிளவுபடுத்தும் வகையில் உள்ளது. இதற்கு முன் எந்த பிரதமரும் இப்படி வெறுப்பு பேச்சையோ, கீழ்த்தரமான வார்த்தைகளையோ பயன்படுத்தவில்லை” என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
Tags :