அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ .பன்னீர்செல்வம் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவரது இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பல்வேறு ஊகங்களையும் ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் பின்னர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் புதிய ஒரு இயக்கத்தை வழி நடத்தி வருகிறார். இதை இவர் அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தை சந்திக்கலாம் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. டிடிவி தினகரன் ,சசிகலா உள்ளிட்டோரிடம் நெருக்கம் காட்டி வரும் ஓபிஎஸ் அதிமுக ஒன்றிணைய வேண்டும் இல்லை என்றால் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று அவர் சமீபத்தில் கேடு விதித்திருந்தார். இந்த சூழ்நிலையில் அவரது டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஓபிஎஸ் உடன் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags :



















