தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் குட்கா கடத்திய வழக்கில் கைது
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, குட்கா, கொகையின் உள்ளிட்ட போதை பொருட்கள் திமுகவினராலேயே கடத்தப்படுவதால் அதை கட்டுப்படுத்த காவல்துறையால் முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தொடர்ந்து ஸ்டாலின் அரசின் மீது குற்றம் சாட்டி வருவது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்றிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...
சிவகிரியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வெளிமாநிலங்களில் இருந்து தனது காரில் 600 கிலோ குட்கா கடத்தி வந்த திமுகவைச் சேர்ந்த தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்ச்செல்வியின் கணவர் போஸ் மற்றும் அவரது டிரைவர் லாசர் இருவரும் கைது செய்யப்பட்டு, சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்...
Tags :