ஓகேனக்கல் அருவிகளில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க 13 வது நாளாக தடை நீடிக்கிறது.

by Editor / 25-10-2024 07:43:55am
ஓகேனக்கல் அருவிகளில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க 13 வது நாளாக தடை நீடிக்கிறது.

தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை எதிரொலியாக ஓகேனக்கல் அருவிகளில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க 13 வது நாளாக தடை நீடிக்கிறது,கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக வருகிறது.நேற்று மாலை நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருவதை தொடர்ந்து ஒகேனக்கல்லில் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும், காவிரி கரையரங்களில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், 13 வது நாளாக தடை தொடர்கிறது. தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான, அஞ்செட்டி, கேரெட்டி, பிலிகுண்டு, நாட்ராபாளையம், ஒகேனக்கல் வனப்பகுதி, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிரடியாக உயர்ந்துள்ளது.
 

 

Tags : ஓகேனக்கல் அருவிகளில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க 13 வது நாளாக தடை நீடிக்கிறது

Share via

More stories

Logo