மக்கள் விரோத ஆட்சியாளர்களை வீழ்த்துவோம் - டிடிவி தினகரன்

மக்கள் விரோத ஆட்சியாளர்களை வீழ்த்துவோம்; துரோகத்தை அகற்றுவோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் முத்திரை பதிப்போம். மக்களை மறந்த ஆட்சியாளர்களை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பவும், துரோகக் கூட்டத்தை அடியோடு துடைத்து எறியவும் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் கூடி உறுதியேற்போம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக் கனியை கொய்து ஜெயலலிதாவின் புகழுக்கு பெருமை சேர்த்திட சபதமேற்றிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
Tags :