துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து தவறான வீடியோ வெளியிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது
வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு சனாதனம் குறித்த கருத்திற்கு பதில் சொல்லும் விதமாக பேசும் பொழுது 2026-திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு மூன்று ஜீயர் மூலம் பரிகாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின் என்று உண்மைக்கு புறமான செய்தியை வீடியோ பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ,திருச்சி ஸ்ரீரங்கத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்கிற கருத்தை பேசியதற்காக பல்வேறு வழக்குகள் துணை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன..
Tags :