மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் - கிருஷ்ணா பரமாத்மா கீதா உபதேசம் செய்த பொழுது...
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணா பரமாத்மா மகாபாரத யுத்த களத்தில் தேரோட்டியாக வந்து அர்ஜுனனுக்கு கீதா உபதேசம் செய்த பொழுது தமக்கு உகந்த மாதம் மார்கழி என்பதை வெளிப்படுத்தி இருப்பார்..
குளிர் ஊசி போன்று தேகத்தை குத்தி நடுநடுங்க செய்யும் காலம் மார்கழி. இந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து திருமணம் ஆகாத பெண்கள் நீராடி, நெய் விளக்கு ஏற்றி கிருஷ்ணனை வழிபட்டால் அவர்களுக்கு திருமணம் ஏற்படும் என்பதை ஆண்டாள் தம் திருப்பாவையில் வாரணம் ஆயிரம் வர..,, கனா கண்டேன், தோழி. கனா கண்டேன் என்று பெருமாளை தன் கணவனாக கைப்பற்றி திரு வீதியில் ஆயிரக்கணக்கான பெண்களோடு யானைகள் புடை சூழ வருகை புரிந்ததாக ... அந்தப் பாடலில் தம் உணர்வை வெளிப்படுத்தி இருப்பார். அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் இட்டு, சாணி உருண்டையில் பூசணி பூவை செருகி வைத்து பெருமாளின் திருநாமங்களை போற்றி பாடி வருகிறவர்களின் வார்த்தைகளை தம் செவிகளில் வாங்கி.... அதிகாலையில் பூஜை செய்தால் நினைத்ததெல்லாம் நிறைவேறும் என்று காலம் காலமாக இறை வழிபாட்டை பின்பற்றி வருகின்ற மக்கள்.... மார்கழியை சிறப்புக்குரிய நாளாகவே கொண்டாடி மகிழ்ந்து வந்தனர். வருகின்றனர்.
Tags :