பள்ளி, கல்லூரிகளில் அரசியல் தலையீடு கூடாது: ராஜகண்ணப்பன்

by Staff / 10-02-2024 02:29:52pm
பள்ளி, கல்லூரிகளில் அரசியல் தலையீடு கூடாது: ராஜகண்ணப்பன்

பள்ளி, கல்லூரிகளில் அரசியல் தலையீடு கூடாது: அமைச்சர் ராஜகண்ணப்பன் கல்லூரிகள், பள்ளிகள் உட்பட கல்வி நிலையங்களில் அரசியல், அதிகார வர்க்கத்தின் தலையீடு இருக்கக் கூடாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில உருது அகாடமி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இணைந்து கருணாநிதி நூற்றாண்டு விழா, உருது மற்றும் தமிழ் மொழி அறிஞர்கள் கவுரவித்தல் மற்றும் கல்லூரி மாணவர்களை கவுரவித்தல் என முப்பெரும் விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலைபல்கலை. வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories