மோடி தியானத்திற்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை: ராமதாஸ்

by Staff / 30-05-2024 02:40:39pm
மோடி தியானத்திற்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை: ராமதாஸ்

தேர்தல் முடிவதற்கு முன்பாக மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்வது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மோடிக்கு ஆதரவாக ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார் அதில், “பிரதமர் தியானம் செய்வதில் எந்த தவறும் இல்லை. தேர்தலுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. தியானம் செய்வது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. நாளை நீங்கள் கூட அங்கு சென்று தியானம் செய்யலாம். எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தில் தேவையில்லாத விமர்சனங்களை முன் வைக்கின்றன” என அவர் குற்றஞ்சாட்டினார்.

 

Tags :

Share via