ரயிலில் ஹெராயின் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யபட்டார்.
கோவையில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுபாப்பு படை போலீசார், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து கோவை வரும் ரயில்களில் சிறப்பு சோதனை நடத்தினர். இந்நிலையில் கோவை வந்த அசாம் திப்ருகார் – கன்னியாகுமரி ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகம்படும் படி இருந்த வாலிபரை பிடித்து, அவரது உடமைகளை சோதனை செய்தனர்.அப்போது அவரிடம் 5. 6 லட்சம் மதிப்பிலான, 70 கிராம் ஹெராயின் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர் அசாமை சேர்ந்த வாசிம் அக்ரம்(23) என்பதும், அசாமில் இருந்து கேரளாவிற்கு ஹெராயினை கடத்தி செல்வதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் இன்று அவரை கைது செய்து, ஹெராயினை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்
Tags :