இன்று மலேசியா கோலாலம்பூரில் நடிகர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா

by Admin / 27-12-2025 01:35:36am
இன்று மலேசியா கோலாலம்பூரில் நடிகர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன்  இசை வெளியீட்டு விழா

இன்று மலேசியா கோலாலம்பூரில் புக் கிட் ஜலில் மைதானத்தில் நடிகர் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது . இவ்விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் நேற்று தனி விமானம் மூலம் மலேசியா சென்றடைந்தார். . அவருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவ சார்பில் சார்பில் மலேசிய பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு  அளிக்கப்பட்டது . இசை வெளியீட்டு விழா நிகழ்வில் இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர்கள் நெல்சன் திலிப் குமார் ,லோகேஷ் கனகராஜ் ,அட்லி, நடிகை பூஜாவுக்கு, நடிகர் பிரபுதேவா ,பாடகி அனுராதா,தமிழக வெற்றிக்கழகப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய  பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாலம்பூர் சென்று உள்ளனர். இவ்விழாவை திரைப்பட கலை நிகழ்ச்சியாக மட்டுமே நடத்த மலேசிய காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அரசியல் பேசவோ, கட்சி தொடர்பான கொடிகள்- சின்னங்கள் , மஞ்சள்- சிவப்பு நிற பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. இவ்விழாவில் ,80 ஆயிரத்தில் இருந்து 90 ஆயிரம் வரை ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.. அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன. ஜனநாயகன் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி அறுநூறுக்கு மேற்பட்ட திரை அரங்குகளில் வெளியாகிறது.

 

 

Tags :

Share via