பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

by Editor / 23-06-2021 04:04:04pm
 பெட்ரோல், டீசல் விலை  குறைப்பு எப்போது  நிதியமைச்சர் பிடிஆர்  பழனிவேல் தியாகராஜன் தகவல்

 


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 ஐ தாண்டி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் டீசல் விலையும் ரூ.93 ஆகிவிட்ட நிலையில் ஓரிரு மாதங்களில் டீசல் விலையும் ரூபாய் 100 ஐ எட்டிவிடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை குறைக்க முடியாது என சமீபத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தது பொதுமக்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இந்த நிலையில்தமிழகத்தில் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ, அப்போது பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி 9 ரூபாய் தான் இருந்தது என்றும் ஆனால் அதன்பின்னர் அதிமுக அரசு அதிகப்படியாக வரியை கூட்டியதாகவும் ஆனால் அதற்கு முன்னர் திமுக ஆட்சியில் இருந்தபோது பெட்ரோலுக்கான வரி அப்போதைய முதல்வர் கருணாநிதி குறைத்தார் என்றும் நிதியமைச்சர் சட்டப்பேரவை விளக்கமளித்தார்.
அதேபோல் கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக பொறுப்பேற்ற பின் ரூ.9 ஆக இருந்த பெட்ரோல் வரியை 29 ரூபாய்க்கும் மேலாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது என்றும் பிடிஆர் பழனிவேல்ராஜன் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via