தலைமைச் செயலாளரை அழைக்கும் உத்தரவை வாபஸ் பெற மம்தா பானர்ஜி கோரிக்கை

by Editor / 31-05-2021 04:57:09pm
தலைமைச் செயலாளரை அழைக்கும் உத்தரவை வாபஸ் பெற மம்தா பானர்ஜி கோரிக்கை


 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த முக்கியமான நேரத்தில் மாநில தலைமைச் செயலாளரை மத்திய அரசு பணிக்கு விடுவிக்க முடியாது என்று கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கு  எழுதிய கடிதத்தில், தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாயை குறிப்பிட்டு, உத்தரவை வாபஸ் பெறுமாறு மம்தா பானர்ஜி கோரியுள்ளார்.
“மேற்கு வங்க அரசாங்கத்தால் அவரை விடுவிக்க முடியாது. இந்த முக்கியமான நேரத்தில் எங்கள் தலைமை செயலாளரை விடுவிக்கமாட்டோம். மே 24 அன்று நீங்கள் தலைமைச் செயலாளருக்கு நீட்டிப்பு வழங்குவதற்கும் 4 நாட்களுக்குப் பிறகு உங்கள் ஒருதலைப்பட்ச உத்தரவுக்கும் இடையில் என்ன நடந்தது என்று புரியவில்லை என்று கூறி உள்ளார்.
யாஸ் சூறாவளி தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியமான சந்திப்பைத் தவிர்த்த பின்னர் அலபன் பாண்டியோபாத்யாயை மத்திய அரசு கடந்த வாரம் மாற்றியது.மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாண்டியோபாத்யாவை மத்திய அரசு பணிக்கு அழைத்து உத்தரவிட்டதுடன், மாநில அரசிடம் அவரை உடனடியாக விடுவிக்குமாறு மாநில அரசிடம் கோரியது. இந்த உத்தரவு ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியது.
மேற்கு வங்க கேடரின் 1987 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அலபன் பாண்டியோபாத்யாய் 60 வயது நிறைவடைந்த பின்னர் மே 31 அன்று ஓய்வு பெறவிருந்தார். இருப்பினும், கொரோனா நிர்வாகத்தில் பணிபுரிய மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அவருக்கு மூன்று மாத கால நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via