திசைத்திருப்பவே ரெய்டு - ஆர்.எஸ்.பாரதி
தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் குறித்த செய்திகள் நாடு முழுவதும் பரவி வருகிறது. அதை திசைத்திருப்பவே ரெய்டு நடக்கிறது. கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி 27 கிமீ நடந்து தெருத்தெருவாக ஓட்டு கேட்டார், அனுமன் பெயரை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க நாடகம் நடத்தினார். பதுக்கிய ₹2000 நோட்டுகளை எல்லாம் விநியோகித்தார்கள்” என தெரிவித்துள்ளார்.
Tags :