டெல்லியில் சோனியா காந்தி, ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு

by Staff / 26-05-2023 03:00:47pm
டெல்லியில் சோனியா காந்தி, ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு

சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி சென்றுள்ள அவர், கர்நாடக மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிப்பதற்காக டெல்லி சென்றுள்ளார் என கூறப்படுகிறது. கர்நாடக அமைச்சரவையில் 24 புதிய அமைச்சர்கள், மே 27 ஆம் தேதி பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via

More stories