கரும்பு வெட்டும் தொழிலாளிகள் 40 பேருக்கு வாந்தி மயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே மேலந்தல் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 40 பேர் ஒன்று சேர்ந்து நேற்றிரவு கோழிக்கறி சமைத்து சாப்பிட்டுள்ளனர்.இந்நிலையில், சாப்பிட்ட சிலமணி நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அனைவரும் மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : 40 cane cutting workers vomited after eating chicken porridge