இந்துக்களின் புனித விழா வைகுந்த ஏகாதேசி....

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதாஉபதேசம் செய்த நாளான இன்று தான் ...வைகுந்த ஏகாதேசி என்று அழைக்கப்படும் புனித நாள். . மார்கழி மாதத்தில், வளர்பிறை பதினோராம் நாளில் கொண்டாடப்படும் இந்துக்களின்புனித விழா வைகுந்த ஏகாதேசி.. வைணவ திருத்தலங்களில் திருமால் ஆகிய பெருமாள் வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படுவதின் மூலம் ,அன்றைய இரவு பொழுதில் கண் விழித்து பெருமாளை தரிசித்தால்.. அன்றைய தினம் சொர்க்க வாயில் திறக்கப்பட்டு இருப்பதின் மூலமாக சொர்க்கத்திற்கு செல்லலாம் என்பது இந்துக்களின் ஐதீகம்.
திருச்சியில் அமைந்துள்ள புனித வைணவத் தனமான ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படுகிற பகல் 10 என்றும் இரவு பத்து என்றும் இரண்டு சிறப்பு நிகழ்வுகளை திருத்தலத்தின் சார்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொரு ஏகாதேசியிலும் விரதம் இருந்து இறைவனை வழிபடுவதின் மூலம் தன் பாவச் செயல்களை இறைவன் மன்னித்து நல்வரங்களை நல்குவான் என்பது இந்துக்களின் நம்பிக்கை புராண நூல்களில் அதாவது விஷ்ணு புராணம் போன்ற நூல்களில் ஏகாதேசி நாட்களில் உன் உன்னாது இருந்து விரதம் மேற்கொள்வதில் பலன் பற்றி கூறியிருக்கின்றது எவர் ஒருவர் வைகுண்ட ஏகாதேசி அன்று விரதம் இருந்து இறைவனை தரிசித்தால் அந்த ஒரு நாள் விரதத்தின் பலன் அனைத்து ஏகாதேசி நாட்களிலும் இருந்த விரதத்தின் பலனை அடைய முடியும் என்று சொல்கிறது. திருமால் தனது எதிரிகளாக இருந்த இரண்டு அரக்கர்களுக்கு இன்று வைகுந்தத்தின் கதவுகளை திறந்ததாகவும் இவ்வைகுந்த கதவுகள் திறந்திருக்கும் பெருமாளை தரிசிக்கும் பொழுது அனைத்து பெயர்களும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் திரு அரங்கத்தில் வைகுந்த ஏகாதேசி 21 நாட்கள் சிறப்பாக வழிபாடு நடத்தப்படுகின்றது. இந்த நாட்களில் பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருவார். ஏகாதேசி அன்று ரத்தினாங்கி என்று அழைக்கப்படும் ஆடையில் கருவரையில் இருந்து ஆயிரங்கால் மண்டபத்தில் அதாவது பரமபத வாசல் என்று அழைக்கப்படுகிற சொர்க்க வாசலுக்கு... அதன் வழியாக உலா வருவார் பெருமாள் இந்த நாளில் மட்டுமே கதவுகள் திறக்கப்படுகின்ற காரணத்தினால் அது சொர்க்கவாசல் என்று அழைக்கப்படுகின்றது. திருப்பதி தேவஸ்தானத்திலும் வைகுந்த ஏகாதேசி வைகுண்ட துவாரம் என்று அழைக்கப்பட்டு தொடர் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறும் அன்றைய பொழுதில் அதாவது ஏகாதேசிநாளில் திறக்கப்படும் வாயில் வழியாக சென்று பெரும்பாலை தரிசி போர் தம் பிறவிப் பெயர்களை எல்லாம் பெரும் பாக்கியத்தோடு வீடு வேறு அடைகின்ற நிலையும் கிடைக்கும் என்று காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் நம்பிக்கை.

Tags :