சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் தொடரும் சோதனை

சென்னையிலுள்ள பிரபல தொழிலதிபர் அபிராமி ராமநாதன் வீடு மற்றும் அவரது போயஸ் கார்டன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை தொடர்ந்து நடந்துவருவதாகவும்,திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் தி நகரில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் உள்பட பல இடங்களில் வருமானவரித்துறை சோதனை.ஒரு சில இடங்களில் ஐடி ரெய்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.தொழிலதிபர் அபிராமி இராமநாதனின் மேலாளர் மோகனின் மந்தைவெளி வீட்டில் நடந்த சோதனை,திருமங்கலம் தொழிலதிபர் காண்ட்ராக்டர் கமலக்கா ரெட்டி வீடு,பட்டினப்பாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவன மேலாளர் தினகரன் வீட்டில் நடந்த சோதனைகள் நிறைவு அடைந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags : சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் தொடரும் சோதனை