தோரணமலை முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது நாள்தோறும் இந்த கோயிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்த நிலையில் இன்று சித்ரா பௌர்ணமி என்பதால் தோரணமலை முருகன் கோவிலில் கிரிவலம் நடைபெற்றது இந்த கிரிவலத்திற்காக அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கின கோயில் மலைப்பாதையை சுற்றி சுமார் ஆறு கிலோமீட்டர் வரை பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர் கோயில் நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags : தோரணமலை முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம்.