நெல்லையில் சமூகவலைத்தளத்தில் சாதிய பதிவு 50 வழக்குகள்.33 பேர் கைது.

'திருநெல்வேலிலியில் சாதி சார்ந்த மோதல்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, அத்தகைய குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. சோசியல் மீடியாவில் தங்கள் சாதியை உயர்த்தியும் மற்ற சாதியினரை தாழ்த்தியும் பதிவிடுகின்றனர். இது, மோதல்களை ஏற்படுத்துகிறது. சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் இது போன்ற நபர்களை கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பதிவுகள் குறித்து ஆராயப்படுகிறது. தவறு இருந்தால் கடும் நடவடிக்கை பாயும். இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் கல்லூரிகள், பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு 35 பேர் இது தொடர்பான வழக்குகளில் 36 பேர் கைது செய்யப்பட்டனர். நடப்பாண்டில் இதுவரை 50 வழக்குகள் பதியப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கை சீரழிக்கும் வகையில், சமூகலைத்தளங்களில் செயல்பட்டால், சமரசம் இல்லாமல் நடவடிக்கை பாயும்.'இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags : நெல்லையில் சமூகவலைத்தளத்தில் சாதிய பதிவு 50 வழக்குகள்.33 பேர் கைது.