மலர்கண்காட்சியை தொடங்கிவைக்க ஊட்டி புறப்பட்ட முதல்வர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் உதகை புறப்பட்டார். கோவை சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக உதகை செல்கிறார். அங்கு, வருகின்ற மே 15 ஆம் தேதியன்று மலர் கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள முதலமைச்சர் பொதுமக்களுக்கு பட்டாக்களை வழங்குகிறார். தொட்டபெட்டாவில் பழங்குடியின மக்களை சந்தித்தும் கலந்துரையாட உள்ளார்.
Tags : மலர்கண்காட்சியை தொடங்கிவைக்க ஊட்டி புறப்பட்ட முதல்வர்.