தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்: 

by Editor / 13-10-2024 06:41:12pm
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்: 

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து மிட்பு பணியில் ஈடுபட ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில்  தலா 30 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார்நிலையில் உள்ளனர். 

மேலும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை  பிரிவு வளாகத்தில் 24*7 அவசர கட்டுபாட்டு மையம் செயல்படுகிறது.தமிழ்நாடு மாநில அவசர கட்டுபாட்டு மையத்துடன்  நேரடி தொடர்பில் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள்  உள்ளனர். 

மேலும் மாவட்ட ஆட்சியர் வளாகங்களில் செயல்படும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அவசர கட்டுபாட்டு மையத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் தமிழ்நாடு  அரசு கேட்டுக் கொண்டால் மழை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட வீரர்களை விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் 300 மீட்பு படை வீரர்கள் நவீன மீட்பு உபகரணங்கள் ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், தொலைதொடர்பு சாதனங்கள்,கயிறு, மருத்துவ முதலுதவி கருவிகள் உள்ளிட்டவைகளுடன் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

 

Tags : தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்: 

Share via