மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்துவிஸ்வகர்ம சமூக மக்கள் ஆர்ப்பாட்டம்.

by Editor / 13-10-2024 06:37:01pm
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்துவிஸ்வகர்ம சமூக மக்கள் ஆர்ப்பாட்டம்.

விஸ்வகர்ம சமுதாயத்தின் வரலாறு மற்றும் பெருமை புகழ் அறியாமல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ள தாகவும், அதற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய பேச்சுகளை வாபஸ் பெற வேண்டும், விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின்  பெயரை மத்திய அரசு மாற்ற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு விஸ்வகர்மா சமுதாய மக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்தும்,விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின்  பெயரை மாற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் திரளான விஸ்வகர்மா சமூக மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்துவிஸ்வகர்ம சமூக மக்கள் ஆர்ப்பாட்டம்.
 
Tags : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்துவிஸ்வகர்ம சமூக மக்கள் ஆர்ப்பாட்டம்.

Share via

More stories