பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் கார்த்திகேயபுரத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில், ஆந்திரா, தமிழக பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததை கண்டுபிடித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த முரளி (46), மனைவி பிரமிளா (41) ஆகியோரை கைது செய்தனர். வீட்டில் இருந்த பெண்களை எச்சரித்து அனுப்பினர். இந்த தம்பதி ஏற்கனவே பாலியல் தொழில் செய்து சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
Tags :