காங்கிரஸ் தலைவர் மாரடைப்பால் மரணம்

by Staff / 11-03-2023 12:08:33pm
காங்கிரஸ் தலைவர் மாரடைப்பால் மரணம்

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் துருவநாராயணா காலமானார். இன்று காலை 6 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக மைசூரில் உள்ள டிஆர்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. மேலும் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். சாமராஜநகர் மாவட்டம் ஹெக்கவாடி கிராமத்தில் பிறந்த துருவநாராயணா பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி வேளாண்மைப் பட்டம் பெற்றார். 1983ல் காங்கிரஸில் தொண்டராக சேர்ந்தார். 2004-ல் சந்தேமரஹள்ளி தொகுதியிலும், 2008-ல் கொள்ளேகலா சட்டமன்றத் தொகுதியிலும் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார்.

 

Tags :

Share via
Logo