சேர்ந்தமரம் அருகே பொதுத்தேர்வுக்கு சரிவர படிக்காததால் மாணவியை கண்டித்த பெற்றோர் - மனவேதனையில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை .

by Editor / 25-03-2025 10:10:23am
சேர்ந்தமரம் அருகே பொதுத்தேர்வுக்கு சரிவர படிக்காததால் மாணவியை கண்டித்த பெற்றோர் - மனவேதனையில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை .

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே உள்ள தண்ணூத்து கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகளான வைஷ்ணவி (வயது 17) என்பவர் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில், தற்போது பொது தேர்வானது நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, இன்றுடன் பொதுத் தேர்வானது முடிவடைய உள்ள நிலையில், பொதுத்தேர்வுக்கு சரிவர படிக்காமல் வைஷ்ணவி செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

 இதைப் பார்த்த அவரது பெற்றோர் வைஷ்ணவியை கண்டித்ததாக கூறப்படும் நிலையில், இதனால் மன வேதனை அடைந்த வைஷ்ணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சென்ற சேந்தமரம் போலீசார் வைஷ்ணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சேந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், பொதுத்தேர்வுக்கு படிக்கவில்லை எனக்கூறி பெற்றோர் கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : பொதுத்தேர்வுக்கு சரிவர படிக்காததால் மாணவியை கண்டித்த பெற்றோர் - மனவேதனையில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை .

Share via