தடைப்பட்ட திருமணம் மணமகன் தூக்கிட்டு தற்கொலை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள ஐவேலி ஊராட்சி வாணி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (27) இவர் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சேலம் ஏத்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 20 ம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு வருகின்ற மே25ம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில் விக்னேஷ் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் குறித்து தகவலின் பெயரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் வழக்கு பதிவு செய்து விக்னேஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் விக்னேஷுக்கும் அஸ்மா என்ற திருநங்கைக்கும் தொடர்பு இருந்ததாகவும் இருவரும் சேர்ந்த எடுக்கப்பட்ட புகைப்படத்தை பெண் வீட்டாரருக்கு அனுப்பி வைத்து விக்னேஷ் தனது கணவர் என்றும் நீ எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று மணப்பெண்ணிடம் கூறியதாகவும் இதனால் மணப்பெண்ணின் பெற்றோர்கள் மணமகனின் வீட்டிற்கு வந்து இதைப்பற்றி விசாரித்ததாகவும் அஸ்மா விக்னேஷின் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததாகவும் இதனால் மனமுடைந்த விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்து கொண்டதாகவும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது சங்ககிரி அருகே திருமணம் நடைபெற நான்கு நாட்கள் உள்ள நிலையில் திருநங்கையின் தகாத உறவால் மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags :