அஞ்சலை அம்மாள் சிலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்

by Staff / 02-11-2023 02:23:38pm
அஞ்சலை அம்மாள் சிலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்

கடலூர் மாநகராட்சியில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலையை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். சுதந்திர போராட்ட தியாகியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான அஞ்சலை அம்மாள் சிலையை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கருவை சுமந்தபடி போராடி சிறை சென்றவர் அஞ்சலை அம்மாள். 'தென்னாட்டு ஜான்சி ராணி' என காந்தியடிகளே வியந்த துணிச்சல் மிக்கவர் அஞ்சலை அம்மாள். இந்த நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Tags :

Share via

More stories