காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

by Staff / 15-09-2022 10:47:45am
காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்


பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்திற்கான சிற்றுண்டி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின். காலை 8 மணிக்கு மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவு அருந்தினார். இத்திட்டத்தின் மூலம் 1 -5ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை நாட்களில் காலை உணவு வழங்கப்படுகிறது.

திங்கட்கிழமை - உப்புமா வகை
ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்
அரிசு உப்புமா + காய்கறி சாம்பார்
கோதுமைரவா உப்புமா + காய்கறி சாம்பார்

செவ்வாய்கிழமை - கிச்சடி வகை
ரவா காய்கறி கிச்சடி
சேமியா காய்கறி கிச்சடி
சோள காய்கறி கிச்சடி
கோதுமை ரவாகாய்கறி கிச்சடி

புதன்கிழமை - பொங்கல் வகை
ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்
வெண்பொங்கல் + காய்கறி சாம்பார்

வியாழக்கிழமை - உப்புமா வகை
சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்
அரிசி+ உப்புமா + காய்கறி சாம்பார்
ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

வெள்ளிக்கிழமை - கிச்சடியுடன் இனிப்பு
எதாவது ஒரு கிச்சடி வகையுடன் (செவ்வாய்கிழமை உணவு வகையின்படி)
ரவா கேசரி
சேமியா கேசரி

மேலும் வாரத்தில் 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக் கூடாது போன்ற அறிவுரைகளையும் அரசு வழங்கியுள்ளது.

காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
 

Tags :

Share via