மதுரை தேனி அகல ரயில் பாதை ரயில் பயணம் துவக்கம்
மதுரை தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் ரயில் பயணம் இன்று தொடங்கியுள்ளது. ரயில் நிலையங்களுக்கு இடையே 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. நேற்று சென்னையில் இருந்தபடி திட்டத்தை பிரதமர் மோடி கணினி வாயிலாக துவக்கி வைத்தார் .12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் இருந்து புறப்பட்ட தேனி வந்தடைந்த ரயிலை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அகல ரயில் பாதை கூடுதல் ரயில்களை இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகள் தெரிவித்தனர்.
Tags :