வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள்- பயணிகள் அதிர்ச்சி .
திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 20665/20666 இது சென்னை , விழுப்புரம் , திருச்சிராப்பள்ளி , திண்டுக்கல் வழியாக சென்னைக்கு செல்கிறது திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு நெல்லை ஜங்ஷனில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.
இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் C2 18 ஆவது நம்பர் இருக்கையில் டிக்கெட் எடுத்து சென்று இருக்கிறார் , அவருடன் நாங்குநேரியை சேர்ந்த அவரது நண்பர் முருகன் என்பவரும் பயணித்திருக்கின்றனர் அப்பொழுது அவர்களுக்கு அதிகாலை உணவு வழங்கப்பட்டிருக்கிறது அந்த உணவில் இட்லி சாம்பார் சட்னி, கேசரி உள்ளிட்ட உணவு வகைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது , உணவே வாங்கியவுடன் பார்த்த அந்த இரு பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர் பார்சலை திறந்து பார்த்த பொழுது அந்த சாம்பாரில் வண்டுகள் இருப்பது தெரியவந்தது உடனே அங்குள்ள ஊழியர்களை அழைத்து தெரிவித்திருக்கின்றனர் ஊழியர்களும் வண்டுதான் என்பதை உறுதி செய்து இனிமேல் நடக்காது எங்களை மன்னித்து விடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது , இவ்வளவு சிறப்பு மிக்க வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.இந்தநிலையில் தென்னகரயில்வே மதுரைக்கோட்டை செய்திமக்கள்தொடர்பு லுவலர் விடுத்துள்ள செய்தியில் M/s பிருந்தாவன் ஃபுட் புராடக்ட்ஸ் நிர்வகிக்கும் திருநெல்வேலி பேஸ் கிச்சன் மூலம் வழங்கப்பட்ட உணவை, உள் மேலாளர், தலைமை கேட்டரிங் இன்ஸ்பெக்டர் (CIR), தலைமை வணிக ஆய்வாளர் (CCI) மற்றும் உதவி வணிக மேலாளர் (ACM) ஆகியோர் உடனடியாக ஆய்வு செய்தனர். இந்த அலட்சியத்தால், அபராதமாக ரூ. 50,000 ஒப்பந்ததாரர் மீது விதிக்கப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாசுபாட்டிற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொண்டு, சம்பவம் குறித்து ரயில்வே விரிவான விசாரணையை நடத்தி வருகிறது.என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்